பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Wednesday, March 08, 2006

விடுதலைப்புலிகளே கேளுங்கள்

அரசியல் சாக்கடை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனாலும் அச்சாக்கடையில் விழுந்த பிறகு தனிமனிதனுக்கு இருக்கக் கூடிய தன்மான உணர்வு கூடவா மழுங்கி விடும்? ஆம் அப்படித்தான் என்று சாட்சி சொல்கிறார் மைக்-கு கிழிய சுய மரியாதைப் பற்றிப் பேசிய ‘கலிங்கப்பட்டி கரடி’ வை.கோ.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல பேசியதற்காகவே ஒராண்டுக்கும் மேலாக ‘கலி’ தின்ன வைத்த ஜெயலலிதாவிடமே கள்ள கூட்டு சேர்ந்துள்ள இந்த மானங்கெட்டவரை என்னவென்று சொல்வது. இவர் சிறையிலிருந்த காலங்களில் ஒவ்வொரு நாளையும் எண்ணி,எண்ணி 'பேனர்' வைத்தே கலைத்துப்போன தொண்டர்களின் உணர்வுகளை காலடியில் போட்டு மிதித்து விட்டு, வெட்கமில்லாமல் ஜெயலலிதாவுடன் குலாவுவதை உணர்வுள்ள எந்த தொண்டனும் மன்னிக்கவே மாட்டான்.

குமரி முதல் சென்னை வரை நடையாய் நடந்த நடைப்பயணத்தைத்தான் மறக்க முடியுமா? வழி முழுவதும் வலிக்காத கால்கள், சென்னையில் ஜெயலலிதா கொடுத்த தொல்லையால், இனிதாய் முடிக்க முடியாத போது வலித்திருக்குமே, அதைக்கூடவா மானங்கெட்டவர் மறந்து விட்டார்.

தமிழர் நலன், தமிழ்க்கலாச்சாரம், தமிழ் மொழிப் பற்று என்று சொல்லிக் கொண்டு, சராசரி மனிதனிடம் இருக்கக்கூடிய சுய மரியாதையைக்கூட இழந்து தழிழன் என்றுக்கூட அல்ல; சாதாரண மனிதன் என்று சொல்லக்கூட தகுதி இல்லாதவராகி விட்டார் இந்த கோபால்சாமி.

உள்ளூர் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு, ஈழத்தமிழர்களாகிய உங்களின் பெயரால் ஈனத்தனமான அரசியல் நடத்தும் இந்த கழிச்சடைகளை விடுதலைப்புலிகளே;உங்கள் ‘பாணியில்’ நீங்களே கேளுங்கள்.

18 Comments:

At 12:34 AM, Anonymous Anonymous said...

"உங்கள் எழுத்துக்களில் காணப்படும் அளவிறந்த வெறுப்பினைக் கண்டே நான் அவ்வாறு பின்னோட்டம் இட நேர்ந்தது. அதற்கு வருத்தம் தெரிவிக்க எண்ணிய வேளையில், இன்றைய உங்கள் பதிவு என் முந்தய எண்ணத்தினையே உறுதி செய்கிறது.
அதுவும், கோழைத்தனமாக, 'புலி'களை தூண்டிவிடும் வகையில் நீங்கள் எழுதியுள்ளது,

//"விடுதலைப்புலிகளே;உங்கள் ‘பாணியில்’ நீங்களே கேளுங்கள்."//
குரோதத்தின் உச்சம்.

வெட்கப் படுகிறேன் இங்கு வந்ததற்கு.
இனி பின்னூட்டம் இட மாட்டேன் உங்கள் பதிவினில்.
நன்றி.
வணக்கம்.

 
At 12:52 AM, Blogger இளந்திரையன் said...

சுய மரியாதை என்று எதை நினைக்கிறீர்கள். தமிழக அரசியல் தலைவர்களில் யாருக்கு இருக்கின்றது? யாரிடம் இல்லை ? எதனால் ? என்று ஒரு பட்டியல் தாருங்கள்.

உங்கள் பதிவை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும் பரங்கியன்.

 
At 11:53 AM, Blogger அட்றா சக்கை said...

நகைச்சுவை என்று வகைப்படுத்தி இருப்பதால் ஆட்சேப கரமான கருத்துகளை விமர்சிக்காமல் இருக்கிறேன்.

 
At 3:22 PM, Anonymous Anonymous said...

//ஈழத்தமிழர்களாகிய உங்களின் பெயரால் ஈனத்தனமான அரசியல் நடத்தும் இந்த கழிச்சடைகளை விடுதலைப்புலிகளே;உங்கள் ‘பாணியில்’ நீங்களே கேளுங்கள்.//

அதற்கென்ன? எடுத்தால் போச்சு. அதற்கும் முன் பலர் இருக்கிறார்களே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தபின். அதுசரி, பின் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் கூச்சல் போட மாட்டீர்கள் தானே?
அதுசரி வை.கோ மீது அப்படியென்ன கோபம்? ஈழத்தமிழர் மேல் அப்படியென்ன "கரிசனை"?

 
At 3:35 PM, Anonymous Anonymous said...

எந்த ஒரு இயக்கமும் விடுதலைக்காக போராடினால் அது தீவிரவாதம் என அழைக்கப்படும். ஆளும் வர்க்கங்களுக்கு ஆமாம் சாமி போட்டால் தான் அவன் தேசப்பற்றாளன். தன் விடுதலைக்காக போராடும் அமைப்பு அது. இந்திரா காந்தி அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது அது தீவிரவாதமாக தெரியவில்லையா? ஆளுபவர்கள் நெல்சன் மண்டேலாவிற்கு ஆதரவு அளிக்கவில்லையா? தலாய் லாமாவிற்கு அடைக்கலம் தரவில்லையா? தமிழன் என்றால் மட்டும் தடை செய்வார்கள். வெளிநாட்டில் உள்ள அமைப்பை தடை செய்ய இந்திய சட்டப்படி உரிமை இல்லை. ஆனால் அகண்ட தமிழகம், ஈழத்தையும் தமிழகத்தையும் இணைக்க புலிகள் போராடுகிறார்கள் என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி இந்திய அரசு புலிகளை தடை செய்துள்ளது.

 
At 4:23 AM, Anonymous Anonymous said...

நீங்கள்,புரிந்த வைகோ இவ்வளவே!
இவருமொரு, வெத்து வேட்டு தான்,இனியாவது புரிந்தால் சரி!
அதேவேளை, அவர் முடிவை நான் வரவேற்கிறேன். கருணாநிதியுடனும் மானங்கெட்டுதான் கூட்டுவைத்தார். ஸ்ராலினுக்கு பல்லக்கு தூக்காமல், வெளியானதே மேல்.
புலிகள் இவரை நம்பியிருக்கிறார்கள் ,என நான் நினைக்கவில்லை.
யோகன்
பாரிஸ்

 
At 6:53 PM, Anonymous Anonymous said...

அட என்னப்பா எல்லாரும் ஸ்டாலினுக்கு பல்லக்கு தூக்குவதுக்கு இது மேல் என்கிறீர்கள், ஜெ என்ன எம்.ஜியாருக்கு தொங்க தொங்க தாலிகட்டிய மனைவியா?அவருக்கு பல்லக்கு தூக்குவதற்க்கு இது மேல். அதுவும் 19 மாசம் ஜெயில்,கோர்ட்டில் உட்கார அனுமதி மறுப்பு என்று எத்தனை அவமானங்கள், சே..மணசு தாங்க மாட்டேங்குதுங்க.

 
At 1:07 PM, Blogger பரங்கியன் said...

\\அதற்கென்ன? எடுத்தால் போச்சு. அதற்கும் முன் பலர் இருக்கிறார்களே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தபின். அதுசரி, பின் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றெல்லாம் கூச்சல் போட மாட்டீர்கள் தானே?
அதுசரி வை.கோ மீது அப்படியென்ன கோபம்? ஈழத்தமிழர் மேல் அப்படியென்ன "கரிசனை"?//


வை,கோ ,புலிகளை உளமார ஏற்றுக்கொண்டதால்தான் வை,கோ -வை கேட்கச் சொல்கிறேன் .நம் வீட்டுப்பிள்ளையைத்தான் நாம் கேட்க முடியும். மற்றவர்களை கேட்டார்கள் என்றால் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றுதான் சொல்வார்கள்.
''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' என்று சூப்பர் முழக்கங்களுடன், இளைஞர்களின் விடிவெள்ளியாக காட்டிக் கொண்ட வை, கோ. கைது செய்யப்பட்டபோது ''பாசிச ஜெயலலிதா அரசை தூக்கி எறிவோம்''
என்று சொன்ன அதே வாயால் “ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம்” என்று சொல்கிறார் .இப்படிப் பட்டவர்களை சகோதர ஈழத்தமிழர்களும் அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவாதானே தவிர வேறில்லை.

 
At 1:45 PM, Blogger பரங்கியன் said...

//சுய மரியாதை என்று எதை நினைக்கிறீர்கள். தமிழக அரசியல் தலைவர்களில் யாருக்கு இருக்கின்றது? யாரிடம் இல்லை ? எதனால் ? என்று ஒரு பட்டியல் தாருங்கள்.

உங்கள் பதிவை விளங்கிக் கொள்ள உதவியாயிருக்கும் பரங்கியன்./ /

சுயமரியாதையே தனக்கு மட்டுந்தான் சொந்தம் என்பது போல பேசிய வை,கோ, எப்படி அதன் வாசனை கூட இல்லாமல் போனார் என்று சுட்டுவதே நோக்கம். அதுவல்லாமல் தமிழக அரசியல்வாதிகளின் சுயமரியாதை புராணத்தை சொல்ல வேண்டுமென்றால் பதிவுகள் போதாது. மெகா சைஸ் புத்தகங்கள்தான் வெளியிட வேண்டும்.

 
At 2:25 PM, Blogger பரங்கியன் said...

///உங்கள் எழுத்துக்களில் காணப்படும் அளவிறந்த வெறுப்பினைக் கண்டே நான் அவ்வாறு பின்னோட்டம் இட நேர்ந்தது. அதற்கு வருத்தம் தெரிவிக்க எண்ணிய வேளையில், இன்றைய உங்கள் பதிவு என் முந்தய எண்ணத்தினையே உறுதி செய்கிறது.
அதுவும், கோழைத்தனமாக, 'புலி'களை தூண்டிவிடும் வகையில் நீங்கள் எழுதியுள்ளது,

//"விடுதலைப்புலிகளே;உங்கள் ‘பாணியில்’ நீங்களே கேளுங்கள்."//
குரோதத்தின் உச்சம்.///


தப்புச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.குறைந்தப்பட்சம் விசாரிக்கப்படாவாவது வேண்டும், அதனால்தான் வை. கோவால் மானசீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புலிகளையே கேட்கச் சொல்கிறேன். இதை கோழைத்தனமென்றும், குரோதத்தின் உச்சம் என்றும் கூறும் உங்கள் மதியீனத்தை என்னவென்று சொல்வது.
உங்களைப் போன்ற உணர்வற்ற ஆதிக்க வெறிப்பிடித்த அடிவருடிகளின் பின்னோட்டத்தால் களங்கப்பட்டிருக்கும் என் பதிவில், ஆரோக்கியமான விமர்சனங்களை ஜமுக்காளம் விரித்து வரவேற்கிறேன். அதே வேளையில்,அரைவேக்காட்டுத்தனமான இப்படிப்பட்ட பின்னோட்டங்களை அனுமதிக்க காரணம் நெஞ்சுறுதியுடன் இவற்றிற்கும் பதில் சொல்ல முடியும் என்பதை சொல்வதற்காகத்தான்.

 
At 2:48 PM, Anonymous Anonymous said...

//தப்புச் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.குறைந்தப்பட்சம் விசாரிக்கப்படாவாவது வேண்டும், அதனால்தான் வை. கோவால் மானசீகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட புலிகளையே கேட்கச் சொல்கிறேன்//
யார் இங்கு தப்புச் செய்தார்கள்? வை கோ தப்புச் செய்திருந்தால் அவரைத் தண்டிக்க வேண்டியவர்கள் தமிழக மக்கள். வை கோ வைத் தண்டிக்க புலிகளுக்கு உரிமை இல்லை. புலிகளுக்குத் தனது தார்மீக ஆதரவை வை கோ தருகிறார். அவ்வளவு தான். தமிழ் நாட்டு அரசியல் சாக்கடையில் புலிகள் தலையிடுவார்கள் என நான் நம்பவில்லை.

 
At 4:38 PM, Anonymous Anonymous said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சின்னப்பையா. விடுதலைப்புலிகள் என்ன விளையாட்டுப்பொருளா? இங்க பாற்றா இவரெல்லாம் அறிக்கை விட்டு விடுதலைப்புலிகளை கேக்க சொல்ற அளவிலை விடுதலைப்புலி என்று நினைப்பு. அன்னோய் வைக்கோ கரடியா புலியா என்று பொறுத்திருந்து பாருங்கள். உண்மையுள்ள எந்த தொண்டனும் தன் தலைவன் குள்ளநரி குகையில் அகப்பட்டு குனிவதை விரும்பமாட்டான். அந்தோ பரிதாபம் உம் முதலைக்கண்ணீர் சொல்லும் செய்தி உமது வைக்கோ மீதான கரிசனையை.

தொண்டன்

 
At 8:53 PM, Blogger கொழுவி said...

ஏப்ரல் 19 அன்று ஜெனிவாவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையில் (நடந்தால்) இது பற்றிப் புலிகள் பேசலாமே..

ஏனெனில்.. புலிகளுக்கு செய்வதற்கும் பேசுவதற்கும் வேறு வேலை வெட்டி எதுவுமே இல்லை

 
At 2:25 PM, Blogger Bharaniru_balraj said...

தமிழக அரசியல் தலைவர்களை விமர்சிக்கலாம். அது உமது உரிமை. ஆணால் புலிகளை கேலி செய்வது கண்டிக்கத் தக்கது.

இங்குள்ள பூணைகளை மிரட்ட புலிகளா.

அவர்களுக்கு 1000 வேலைகள் உள்ளன் தோழரே
என்றாவது ஒரு நாள் மாவீரர்கள் கனவு நனவாகும்.
சிந்திய குருதிக்கெலாம் காலம் கனிவாய்ப் பதில் சொல்லும்.

 
At 4:12 PM, Blogger U.P.Tharsan said...

:-)) ha ha ha படுதமாஸ் பதிவு. :-((

 
At 8:03 PM, Anonymous Anonymous said...

பாத்திங்களா பாத்திங்களா
புலிகளையும் வை.கோவையும்
நீங்க பேசினத்துக்கே
எல்லாரும் முண்டாசு கட்டிட்டு
வந்துட்டாங்க.

யாப்போ வேர்த்துகொட்டுதோய்
இது ரெண்டு பக்கமும்
கூரானகத்தி.

ஆமா வைகோ கட்சி மாறி
டண்டனக்க ஆடுறதுக்கு
எதுக்கு புலி தேவையா.
ராசீவ் காந்திக்கு நடந்தத
ரசிச்சது பத்தாத.

வேட்டிய உருவென மானந்த போகும்
துப்பாகில சுட்டா உசுருபோகும்
இதுல உசுரு பெருச மானம் பெருசா.

 
At 12:59 AM, Anonymous Anonymous said...

நண்பர்களே!,

அன்று தென் இந்தியர்களை குரங்குகள் என்றும் இலங்கைத் தமிழர்களை அரக்கர்கள் என்றும் சொன்னார்கள். இன்று தமிழர்களை பயங்கரவாதிகள் என்று சொல்கிறார்கள். இராமாயணத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது போல் இதையும் almost ஏற்றுக் கொள்ள வைத்துள்ளனர். தயவு செய்து தமிழ் நாட்டு அரசியலில் தமிழ் விடுதலைப் போரை கொச்சைப் படுத்தாதீர்கள். இலவசங்களை பெற்றுக் கொண்டு நன்றாக இருக்கவும்.

 
At 1:38 AM, Blogger பரங்கியன் said...

பின்னோட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
//தயவு செய்து தமிழ் நாட்டு அரசியலில் தமிழ் விடுதலைப் போரை கொச்சைப் படுத்தாதீர்கள்.//

Anonymous நண்பரே கொச்சைபடுத்துவது நோக்கமல்ல தமிழர் நலன் எனக் கூறிக்கொண்டு இப்படியெல்லாம் அரசியல் நடத்துகிறார்கள் பாருங்கள்

 

Post a Comment

<< Home