பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Friday, February 10, 2006

கறுப்பு கதைகள்

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிறது தேசிய பொருளாதார ஆய்வுக்கவுன்சிலின் ஆய்வுகள். சுமாரான மாநிலமான ஹரியானாவில் மட்டும் 482 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.இது பெங்களூரை விட அதிகம். 1.5 கோடி பேர் 'கிரெடிட் கார்டு' வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தங்கள் வருட வருமானம் 10 லட்சத்திற்கும் மேல் என்று தெரிவிப்போர் வெறும் 85,000 பேர் தான் என்கிறது வருமான வரித்துறை.

அர்விந்த் விர்மானி என்பவரின் ஆய்வின்படி வரி கட்ட வேண்டியவர்களில் 74% பேர் வரி வலைக்கு வெளியே இருப்பதாக கூறுகிறார். உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகித கறுப்புப்பண ஆதிக்கம் இருப்பதாக மதிப்பிடுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண்குமார்.

சீர்திருத்தம் மற்றும் தாரளமயமாக்கலுக்கு பிறகு நியாயப்படி கறுப்புப்பண விகிதம் குறைந்திருக்க வேண்டும், ஆனால் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்து(1975-ல்) 97.5% இருந்த வரியை 33% குறைத்தும்,பல மன்னிப்புத்திட்டங்கள் மற்றும் தண்டனை மிரட்டல்கள் அறிவித்தும் கறுப்புப்பணத்தின் அளவு பல மடங்கு அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. 1983-ல் 36,786 கோடியாக இருந்த கறுப்புப்பணம் தற்போது 9,00,000 கோடியாக (என்ன தலை சுத்துதா)அதிகரித்திருக்கிறது.தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிலையத்தின் பொருளாதார வல்லுனர் இந்திரா ராஜாராமனும் இதை ஒப்புக்கொள்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்,கறுப்புபண வளர்ச்சி தொழில்துறை மற்றும் விவசாயத்துறையை விட சேவைத்துறையில்(அதாங்க டாக்டரு,இஞ்சினியரு,வக்கீலு-இவங்கலெல்லாம் சொல்லுவாங்களே "சர்வீஸ் ஃபீசு") தான் அதிகம். இத்துறையில் மூன்றில் இருவர் வரி ஏய்ப்பு செய்வதாக தெரிகிறது. இந்தத்துறையில் மட்டும் கணக்கில் வராத வருமானம் 3,00,000 கோடியை தொடும். இதனால்தான் நடிகர்கள்,உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் என அனைவரும் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை கட்டுகிறர்கள்.நூறு பேருக்கு இலவச சேவை செய்து விட்டு மற்றவற்றை பதுக்கி விடுகிறார்கள். இவற்றில் வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் சில மத அமைப்புகளும் அடங்கும். அமெரிக்காவுக்கு கூட "சூறாவளி நிதி" வழங்கிய மத அமைப்பு இங்குண்டு.

தொழிலதிபர்கள்,அதிகாரிகள் தவிர அரசியல்வாதிகள்தான் அதிகளவில் கறுப்புப்பணம் வைத்திருக்கிறார்கள். திட்டங்களை செயல்படுத்த எல்லா மட்டத்திலும் லஞ்சம் பெறுவதின் மூலம் வருடந்தோறும் அரசுத்திட்டங்களே 60,000 கோடி ரூபாய் அளவிற்கு கறுப்புபணம் உருவாவதற்கு வழிவகுக்கின்றன. மேலும் பதவியிலிருக்கும்போது பொது சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்குதல்,மின் திருட்டு (மொத்த உற்பத்தியில் 20% திருடப்படுகிறது), பணியிட மாறுதலுக்கு பணம் பெறுவது, தொழில் தொடங்க லைசென்ஸ்-க்கு என பல வகையிலும் பணம் பிடுங்கப்படுகிறது. இவை எல்லா ஆட்சியிலும் சத்தமில்லாமல் நடந்துக்கொண்டிருக்கிறது. இது தவிர பெரிய அளவிலான ஊழல்களும் நடக்கின்றன. 1987-ல் போஃபர்ஸ் தொடங்கி 12-க்கும் மேற்பட்ட மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இவற்றின் மூலம் 25,000 கோடிக்கும் அதிகமாக சுருட்டப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஆட்சி மாற்றங்களின் போது வெளியே தெரிந்தாலும்,விசாரணைக்கமிஷன் அமைத்து விசாரித்து முடிப்பதற்குள் குற்றம் சாட்டப்பட்டவர் செத்தே விடுகிறார். அல்லது தண்டனை பெற்றவர்களை பார்த்தோமேயானால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே உள்ளது, மேலும் குற்றவாளிக்குரிய தண்டனைகளும் நகைப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்நிலைமைகள் இல்லதொழிய சட்ட மாற்றங்களால்தான் முடியும் என,என்னுடைய முந்தைய பதிவையே மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்கிறேன்.

2 Comments:

At 1:00 PM, Blogger manasu said...

இதுக்கெல்லாம் அரசியல் வாதி மட்டுமே காரணம் இல்லை. முக்கியமாய் நமது நீதித்துறை. எதற்கு இவர்கள் முடிவு சொன்னார்கள்????????

சமீப காலங்களில் பத்திரிக்கைகளில் படித்தது....

1. சுதந்திர போரட்ட தியாகி என பொய் சொல்லி (அதிலுமா...) பென்ஷன் வாங்கியதாய் வழக்கு 12 பேர் மீது. 10,15 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வந்த போது அதில் 10 பேர் அவர்களாகவே இறந்து போயிருந்த்தார்கள்.(மற்றவர்கள் அடுத்த கோர்ட் ல் அப்பீல் செய்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்... என்ன அங்கு ஒரு 10 வருடம் அவர்களின் கதையும் முடிந்த்து விடும்)

2.ஒரு கற்பழிப்பு வழக்கு. நேரில் பார்த்த சாட்ச்சியாய் ஒரு சிறுமி. இப்போது அச்சிறுமியின் கையில் ஒரு சிறுமி (அவளின் குழந்தை). வழக்கு இன்னும் நடை பெறுகிறது..........................................................

 
At 1:46 AM, Anonymous Anonymous said...

அப்பப்பா தலை சுத்துது

 

Post a Comment

<< Home