பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Sunday, March 05, 2006

இப்படியும் நடக்குது!

சின்ன வயசுல அப்பா,அம்மா விளையாட்டு,விளையாடினாலே தப்புன்னு சொல்லுவாங்க.ஆனா இங்கே பெத்தவங்களே தாலி எடுத்து கொடுத்து,கல்யாணம் நடத்தி அப்பா-அம்மா விளையாட்டு விளையாடச் சொல்றாங்க.அட உண்மையாதாங்க.

ஹைடெக் சிட்டி-யான ஹைதராபாத் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், காளஹஸ்தி என்ற ஊரில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில், ஒவ்வொரு வருடமும் மஹா சிவராத்திரி விழாவை ஒரு வாரம் கொண்டாடுவார்களாம். இந்த விழாவின் ஹைலைட்டே அம்பாள் திருமணம் தான். அம்பாள் திருமணத்தின் போதே தங்கள் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்வதை புண்ணியமாக(?)க்கருதி சிறுவயது குழந்தைக்கு கூட திருமணம் செய்து வைக்கிறார்கள்.


எப்போதோ ஒழிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்திருமணங்கள் மதத்தின் பெயரால் தொடர்வது இளைய தலைமுறைக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும். பல்வேறு சமூக நல அமைப்புகளின் கண்டணத்தினால் மாநில அரசு இம்முறை இரண்டாயிரத்திற்கும் அதிகமான போலிசாரை பணியில் ஈடுபடுத்தி,கண்காணித்தார்களாம். என்ன கண்காணித்து என்ன பிரயோஜனம்,

பாருங்க ஜோரா கல்யாணம் முடிஞ்சி பொண்ணும்,மாப்பிள்ளையும். ரெடியா இருக்காங்க .


மதத்தின் பெயரால் நடக்கும் இக்குற்றங்களை தடுக்க வேண்டிய மடாதிபதிகளே, கொலையாதிபதிகளாக இருக்கும் இக்காலத்தில் பாவம் இப்படியும் நடக்குது போலீஸ் என்ன செய்யும்.

0 Comments:

Post a Comment

<< Home