பாலைவன பரங்கியன்

அரசியல்வாதிகள் குறித்த விமர்சனங்களுக்கான வலைப்பூ

Wednesday, February 22, 2006

ஐ.நா. சபைக்கு தடை?

கியூபா நாட்டில்,அமெரிக்கா ஆக்கிரமிப்பில் உள்ள துறைமுக நகரமான "குவாண்டனமோ" சிறைச்சாலையில் நடக்கும் கொடுமைகள் எப்போதாவது வெளி உலகிற்கு தெரிவதுண்டு. கடந்த வருடம் உலக பொது மறை திருக்குர்-ஆன், ஈனப்பிறவிகளான அமெரிக்க ராணுவத்தால் அவமதிக்கப்பட்டது. அப்போது உலகெங்கும் அமெரிக்காவை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. வெளியே தெரிந்த ஒரு சம்பவத்திற்கே உலகம் கொதித்தெழுந்தது.

ஆனாலும் அங்கே தினம்,தினம் சிறைக்கைதிகள் மீது அநியாயம் புரிந்து வருகிறது அமெரிக்க ராணுவம். செத்த பாம்பை அடிப்பதற்கு சமமாக தங்களிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் கைதிகளை வெறிக்கொண்டு கொடுமைப்படுத்துகிறார்கள் ரத்த வெறி பிடித்த அமெரிக்க ராணுவத்தினர்.

இதைத்தான் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது ஐ.நா.சபையின் மனித உரிமைக் கமிஷன் பரிந்துரை.

சிறைக் கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த நிலையில்,சிறை நிலைமைகளை ஆராய்ந்த ஐ.நா. மனித உரிமை கமிஷன் பார்வையாளர்கள் அச்சிறை மூடப்பட வேண்டிய ஒன்று என்றும், அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஐ,நா. பொது செயலாளர் கோஃபி அனான் சிறைச்சாலை மூடப்பட வேண்டும் என்பதோடல்லாமல் இது சம்பந்தமாக எவ்வளவு விரைவாக முடிவு எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அமெரிக்க முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கோஃபி அனானின் இவ்வார்த்தைகள் மூலமே "குவாண்டனமோ" சிறையில் நடைபெறும் அட்டூழியங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை உணர முடிகிறது.

ஆனால் வளர்ந்த நாட்டின்(?) காட்டுமிராண்டிகளான புஷ்-ம் அவரது அமைச்சரவை சகாக்களும் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர். இது பற்றி அமெரிக்க வெளியுறவு மந்திரி டொனால்டு ரம்ஸ்ஃபீல்டு கூறுகையில் "இது தவறான கருத்து, சிறைச்சாலையை மூட மாட்டோம்" என்று திமிர்த்தனமாக கூறியுள்ளார்.

உயிர்க்கொல்லி அமெரிக்க அரசின் இப்போக்கு தொடர்ந்தால், அவர்களால் தீவிரவாதிகள் எனக் கூறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரும் ஐ,நா. மனித உரிமைக் கமிஷனும், சிறை மூடப்பட வேண்டும் எனக் கூறும் கோஃபி அனானும், அமெரிக்க அரசின் ஊனப்பார்வையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்தவர்கள் ஆவார்கள். ஆக ஐ.நா.சபையையும் தடை செய்து, அமெரிக்கா தனது தீவிரவாதப்பட்டியலில் சேர்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

0 Comments:

Post a Comment

<< Home